அச்சுவேலி சந்தை மோசமான நிலையில் –  வியாபாரிகளும் நுகர்வோரும் சிரமம்!

Saturday, December 3rd, 2016

அச்சுவேலிப் பொதுச்சந்தையில் பொருத்தமான வசதிகளோ, அபிவிருத்திகளோ மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் சந்தையில் வியாபாரம் செய்வோர் மற்றும் பெதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. என வியாபாரிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்:

அச்சுவேலிப் பொதுச்சந்தையில் எவ்விதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு கிடைக்கின்ற குத்தகை வருமானத்தில் 80 வீதத்துக்கு மேற்பட்ட வருமானம் அச்சுவேலிச்சந்தையில் இருந்த பெறப்படுகின்றது. அச்சுவேலிப் பொதுச்சந்தை 2017ஆம் ஆண்டுக்கான குத்தகை கூறுவிலை கோரலில் 1 கோடியே 16 லட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று குத்தகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பெறப்படும் குத்தகைப் பணத்தில் குறிப்பிட்ட வீதத்தைப் பொதுச்சந்தையின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? முன்புப் பொதுச்சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் இருந்த பொதுச்சந்தையின் சுகாதார மேற்பார்வை தற்போது சிற்றூழியர் தரத்தைச் சேர்ந்த உருவரின் கீழ் இருக்கின்றது. இதனால் சந்தையைத் துப்பரவு செய்தல், கழிவுகளை அகற்றல் மற்றும் மலசலகூட சுத்திகரிப்பு போன்றன பொருத்தமான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. இது மிகவும் சுகாதாரக்கேடான நிலையை ஏற்படுத்தியுள்ளது. நகர மயமாக்கலுக்கு ஏற்ற வகையில் திருநெல்வேலி, சுன்னாகம், சந்தைகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. இது போன்று அச்சுவேலிப் பொதுச்சந்தையும் பொருத்தமான மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றனர்.

இது தொடர்பில் வலிகிழக்குப் பிரதேச சபைச் செயலர் தெரிவிக்கையில்,

அச்சுவேலிப் பொதுச்சந்தையை நவீனமயப்படுத்துவதற்காக இந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2014ஆம் ஆண்டு பொதுச்சந்தையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொருத்தமான வசதிகளுடன் செய்து கொடுக்கப்படும். சந்தைக்கு என்று சந்தை மேந்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர், வெளிக்கள மேற்பார்வையாளர் என 3 நிலைகளில் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளுக்குத் தற்போது சேவைத் தரத்தைப் பூர்த்தி செய்தவர்கள் இல்லை. இதனாலேயே பொதுச் சுகாதார மேற்பார்வைச் சிற்றூழியர் தரத்தை சேர்ந்தவர் பார்iவிடுகின்றனர். இதற்காக நியமனங்களைப் பெற்றுத்தரும்படி மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். சேவைத் தரத்தை உடைய நியமனங்களும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் – என்றார்.

06082010atchuvelyl

Related posts: