ஃபிஃபா முன்னாள் தலைவர் காலமானார்!
Wednesday, August 17th, 2016
உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் ஜோவா ஆவ்வலாஞ்சி தனது நூறாவது வயதில் காலமானார்.
கால்பந்து விளையாட்டை பல பில்லியன் டாலர் மதிப்பு சர்வதேச நிறுவனமாக்கிய பெருமை மற்றும் உலக கால்பந்து போட்டியை 16 லிருந்து 32 அணிகள் பங்கேற்க வைத்த பெருமை இவரையே சேரும். ஆனால் இவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து ஃபிஃபாவிலிருந்து ராஜிநாமா செய்தார். முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரரான இவர், ஒலிம்பிக் போட்டிகளை ரியோவில் நடத்துவதற்கான முயற்சிகளில் ரியோவுக்கு ஆதரவாக திறம்பட பணியாற்றினார். தற்போதைய ஒலிம்பிக் மைதானம் இவர் பெயரைக் கொண்டுள்ளது
Related posts:
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் மனு மீளாய்வு விசாரணைக்கு!
மீண்டும் சங்கக்கார அதிரடி!
நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர்...
|
|
|


