E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் தெளிவூட்டல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட செயலமர்வொன்று நடைபெற்றது.
யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை (19) நடைபெற்ற இந்த செயலமர்வில் கட்சியின் வடக்கு – கிழக்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் குறித்த செயலமர்வு நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் இலங்கை தேர்தல் கண்காணிப்பகத்தின் வளவாளர்களால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தெளிவான விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்புக் கழிவுகளுக்கே தீர்வில்லை : வெளிநாட்டுக் கழிவுகளால் யாருக்கு இலாபம்? – நாடாளுமன்றில் டக்ளஸ்...
இழுவை வலை தடைச் சட்டத்தை கடந்த ஆட்சியில் பயன்படுத்தாதது ஏன்? - அமைச்சர் டக்ளஸ் கேள்வி!
ஜனாதிபதி ரணிலின் வெற்றி - தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்கால...
|
|