வெளிப்படைத் தன்மையுடன் மீளாய்வு செய்து சேவை மூப்பின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் – சுகாதாரத் தொண்டர்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, May 11th, 2021
வடக்கு மாகாணத் சுகாதாரத் தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் சேவை மூப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதியுடன் பிரஸ்தாபித்து இருப்பதாகவும், அதேபோன்று வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையில் நீண்ட நாட்களாக கடமையாற்றி வருகின்ற வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் பிரதிநிதிகள் இன்று(11.05.2021) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதாரத் தொண்டர் நியமனம் நீண்ட காலமாக இழுபட்டு வருகின்ற நிலையில், மாகாணசபையிடம் இருக்கின்ற சுமார் 850 பேர் அடங்கிய பட்டியலை வெளிப்படைத் தன்மையுடன் மீளாய்வு செய்து நியமனங்கள் வழங்கப்படும் எனவும், குறித்த செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பாக ஆளுநருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


