அவதூறு பரப்பும் “விண்ணனிடம்” – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
Monday, November 11th, 2024
அவதூறு பரப்பும் “விண்ணனிடம்” 1000 கோடி நட்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.
விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.
அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.
பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.
இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன்
000
.
–
000
Related posts:
|
|
|


