வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனைத்துக்கும் நிச்சயமாக தீர்வுகண்டு காட்டுவேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, July 31st, 2020

வரவுள்ள புதிய அரசில் அதிகரித்த அரசியல் பலத்துடன் நாம் பங்காளர்களாக இருப்போமேயானால் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனைத்துக்கும் நிச்சயமாக தீர்வுகண்டு காட்டுவேன் என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் – 

இலங்கை இந்திய ஒப்பந்ததை ஏற்றுக் கொண்டு அதை சரிவர நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் நடைமுறையிலே சுய நிரணய உரிமையை பெற்றிருக்கலாம். ஆனால் கிடைத்த அந்த பொன்னான வாய்ப்பை தட்டிக்கழித்ததனால் முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தையே சந்திக்க நேரிட்டது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சர்வதேச தூக்குமேடைக்கு கொண்டு செல்வோம் என்று கூறியவர்கள் இன்று தங்களுக்கு வாக்களியுங்கள் தாங்கள் அரசாங்கத்துடன் தீர்வு பெற்றுத்தர கதைப்பதாக கூறுகின்றார்கள்.

ஆனால் நாம் அவ்வாறு பொய்களைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்பவர்கள் அல்லர். எது யதார்தமோ அதையே வெளிப்படையாக முன்வைத்து மக்களிடம் வாக்குகளை கேட்டுவருகின்றோம்.

கடந்த காலத்தில் நல்லாட்சி என்று ஒரு ஆட்சியை கொண்டு வந்தவர்கள் அதனூடாக என்ன செய்தார்கள்?  ஏதாவது ஒரு பிரச்சினைக்கேனும் தீர்வு கண்டார்களா? எவ்வளவே செய்திருக்காலாம்.

மக்களின் விரும்புக்கேற்ப வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் எமது கட்சியின் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதனால் மக்காளிடம் 20 ஆசங்களை எதிர்பார்க்கவில்லை குறைந்தளவு ஆசனங்களையே எதிர்பார்கின்றேன். அவ்வாறு தமிழ் மக்கள் எனக்கு வழங்குவார்களானால் எம்’மிடமுள்ள தேசிய நல்லிணக்கம் மூலம் அதிகளவானவற்றை செய்துகாட்டுவோம் என்றார்.

Related posts:

நீரிழிவு நேயைக் கட்டுப்படுததவது தொடர்பில் பரந்தளவிலான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட வேண்டும்!
போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...