வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்!

வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பாக, குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்
குறித்த சந்திப்பு இன்று காலை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதேவேளை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்கள், ஒருநாள் மீன்பிடிப் படகுகளை செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை ஏற்பாடுகள் மற்றும் வினைத் திறனான செயற்பாடுகளுக்கான உட்கட்டுமாணங்கள் தொர்பான திட்ட வரைபுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|