யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் என்றும் துணை நிற்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 9th, 2018

கடந்த காலங்களில் நடந்தவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்வதற்கு எமது மக்கள் சரியான அரசியல் தலைமையான எமக்கு ஆதரவு தருவார்களேயானால் நிச்சயம் அவர்களது எண்ணங்களை ஈடேற்ற நாம் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டு பகுதியில் மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து சமகால விடயங்கள் தொடர்பாக எடுத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புக்களை தமிழ் அரசியல் தலைமைகள் சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் எமது மக்கள் கையேந்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள்.

ஆனால் சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் சரி இன்றும் சரி தமது சுயலாபத்தை முன்நிறுத்தியதாகவே செயற்பட்டு வருகின்றார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் பொதுநலம் பேசும் இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தமது சுயநலத்தையே முன்னிறுத்தி வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் எம்மிடம் இருந்த குறைந்தளவு அரசியல் பலத்தை கொண்டு  முடியுமானவரையில் நாம் மக்களுக்கு செய்து காட்டியுள்ளோம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்பது பாதை திருத்துவதற்கும் குப்பை கூழங்களை அகற்றுவதற்குமான பொறிமுறை அல்ல. மக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பெரும்பாலான முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகாண்பதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒளிமயமான வளமான எதிர்காலத்திற்கு நாம் என்றும் துணை நிற்போம் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

Related posts:

கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...
நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. - அமைச்சர் டக...

பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? - மன்றில் டக்ளஸ் தேவானந...
பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்க...