முயற்சி என்பது விழலுக்கு இறைத்த நீராக அமைந்து விடக் கூடாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Monday, June 22nd, 2020
தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக மாறி விடக் கூடாது.
எனவே, சரியான தரப்புக்களை மக்கள் அடையாளம் கண்டு கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பளை கிராமிய கூட்டுறவுச் சங்கத்தின் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பிலயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேவையான கொள்கை மற்றும் அதனை அடைவதற்கான பொறிமுறை ஈ.பி.டி.பி. கட்சியிடம் மாத்திரமே இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய கட்சிகளிடம் இலக்கினை அடைவதற்கான பொறிமுறை இல்லை என்பதையே சக கட்சிகளின் கடந்த கால செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.
எனவே, மக்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீணை சின்னத்திற்கு வாக்களித்து தன்னுடைய கரங்களை பலப்படுத்துவார்களாயின், அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினைகள் அரசியல் தீர்வு போன்ற அனைத்தையும் பெற்றுத் தரமுடியும் என்று உறுதியளித்துள்ளார்.
நடைபெறவுள்ள நடாளுமனறத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா அவர்கள், யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீணை சினனத்தில் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


