மாசி 10 எமது மக்களது அபிலாஷைகள் நிறைவேறு வதற்கான நாளாக அமையும் – நம்பிக்கை தெரிவிக்கிறார் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 7th, 2018

ஆற்றல் அக்கறை தற்துணிவுள்ள எம்மால் மட்டுமே மக்களுக்கான சேவைகளை சிறப்புடன் முன்னெடுக்க முடியும். அந்தவகையில் வரும் மாசி 10 ஆம் திகதி மக்கள் தமது அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் நாளாக உருவாக்குவார்கள் என நம்பிக்கை கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் நாம் கிடைக்கப்பெற்ற குறைந்தளவு அரசியல் பலத்தினைக்கொண்டு எமக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் முடியுமானவரையில் மக்களுக்கான பணிகளைச் செய்து சாதித்துக் காட்டியுள்ளோம்

அந்தவகையில் இம்முறை நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் எமக்கு அதிகளவான வெற்றியை வழங்குவார்களாயின் தமிழ் மக்களது ஒவ்வொரு பிரதேசத்திலும்  நிச்சயம் ஒரு மாறுதலை ஏற்படுத்திக் காட்டுவோம்.

எமது மக்களது தேவைகள் யாவும் உண்மையில் தீர்க்கப்பட வேண்டம் என்பதில் எமக்கு அதிகளவான அக்கறை உண்டு. எமது மக்களுக்கு வரும் உதவித் திட்டங்களை தடுத்த நிறுத்தும் இதர தரப்பு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளிலேயே இன்றும் எமது மக்கள் அவல வாழ்விலிருந்து மீளமுடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் கடந்தகால படிப்பினைகளைக்கொண்டு எம்மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் காணப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்தவகையில் தென்னிலங்கை அரசுகளை நாம் ஒருபோதும் குறைசொல்லாது அந்த அரசுகளினூடாகவே எமது மக்களுக்கு ஏற்றவகையிலான நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலைப்பாடே, கடந்த காலத்தில் பல நலத்திட்டங்களை மக்களுக்காக  பெற்றுக்கொடுக்க முடிந்தது.

தீர்வுகாணக்கூடியதான வழிமுறைகள் இருக்கின்றபோதிலும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாது கடந்தகால தமிழ் தலைவர்கள் விட்டதவறுகள் எமது மக்களை இன்றுவரை பல துன்பங்களை அனுபவிக்க வைத்து வருகின்றது.

எனவே வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்திற்கு பெரு வெற்றியை தருவார்களாயின் மாசி 10 எமது மக்களது அபிலாஷைகள் நிறைவேறுவதற்கான வழியை உருவாக்கும் திறவுகோலாக அமையும் நாளாக இருக்கும் என்றார்.

Related posts:


சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் ...