மற்றுமோர் உலக சாதனை படைத்த திருச்செல்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிப்பு!

Sunday, April 14th, 2024

உலக சாதனை படைத்துள்ள திருச்செல்வத்தின் தொடர் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திலும் வலுச் சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்றிலையில் இன்றையதினம் 2600 கிலோ எடையுடைய உழவு இயந்திரத்தை தனது கழுத்தினால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

முன்பதாக  திருச்செல்வத்தின் முயற்சிகள் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை ஊக்குவிக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரம் தாடியாலும், 500 மீற்றர் தூரத்தை தனது தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த முயற்சியினூடாக உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் திருச்செல்வம் தனது மற்றுமொரு உலகசாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருந்த நிலையில் அதனையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சர் குறித்த நிகழ்விடத்திற்கு சென்றிருந்தார்.

இன்று மாலை நடைபெற்ற குறித்த சாதனை முயற்சியானது 2600 கிலோ எடை கொண்ட உழவு இயந்திரத்தை 50 மீற்றர் தூரம் வரை திருச்செல்வம் தனது கழுத்தினால் இழுத்து சாதனை படைத்ததுடன் அது உலகசாதனைப் பத்தகத்திலும் பதிவானது.

குறித்த சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு அனுசரணை வழங்கியிருந்த நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் அவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால்  வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது  

Related posts:

மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்தவர் அமரர் ரஞ்சித் டி சொய்சா – அனுதாபப் பிரேரணையில்...
மீண்டும் சேவையில் குமுதினி - தீவகத்தின் கடற்போக்குவரத்து தொடர்பில் நேரில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் ...
மீன்கள் இருக்கின்ற இடத்தை கண்டுபிடிக்க பலநாள் படகுகளில் கருவிகள் - தொடர்புபட்ட நிறுவனத்தினர் அமைச்சர...

அர்த்தமுள்ள வகையில் மீள்குடியேற்றம் செய்யாது இந்தியாவிலிருப்பவர்களை எந்த நம்பிக்கையில் அழைப்பது? – ந...
திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருங்கள் ...
நீதிக்கு தலை வணங்குவேன் : அநீதிக்கு அடிபணியேன் - கடற்றொழிலாளர்க்கு தீங்கிழைக்கவும் மாட்டேன் - அமைச்ச...