மக்கள் விழித்தெழுவார்களாயின் விடியல் வெகு தொலைவில் இல்லை: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Monday, July 27th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விழிப்பாக செயற்பட்டால் மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சில வருடங்களுக்ள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,  தன்னை நம்பி அணி திரளுமாறு அம்பாறை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களி்ல் ஈ.பி.டி.பி. கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களை நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் ஏனைய மாவட்டங்களில் கிடைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அம்பாறை மாவட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டமையையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேச மக்களுடன் ஒப்பிடுகையில் அம்பாறை மக்கள் வித்தியாசமான அரசியல் இருப்புசார் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், தனது கரங்களை நம்பிக்கையுடன் பலப்படுத்துமாறும் அனைத்துப் பிரச்சினைகளையும் தன்னால் வெற்றிகரமாக தீர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிபாரிசினால் அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொண்ட அம்பாறை ஆலையடிவேம்பை சேர்ந்த பெண்ணொருவர், செயலாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னத்தினை வழங்கி தன்னுடைய நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கு ஓடக்கரை வழிகாட்ட வேண்டும் - அமைச்சர் டக...
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு - அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்...