பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, November 2nd, 2023

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருதான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – வெறுமனே உசுப்பேற்றும் அரசியலை பேசுவதுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்கும் வகையிலேயே பெரும்பலான மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனபப்படையில் இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி, எம்மால் முன்னெடுக்கப்படும்  சரியான வேலைத்திட்டங்களோடு மக்களை அணி திரட்ட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

000

Related posts:


இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏ...