பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 16th, 2017

எமது பிரதேசத்தின் பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் முடிவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் உரியகாலத்தில் பெற்றுக் கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய அழிவு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான இக்காலப்பகுதியில் பல்வேறு தொழில் துறைகளும் மாற்றம் கண்டுவருகின்றன. அவற்றில் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறைகள் உள்ளிட்ட ஒவ்வொரு தொழிற்றுறைகளும் நவீன தொழில் நுட்பத்தடன் கூடியதான வளர்ச்சியில் மேம்பாடுகண்டுவருகின்றன .

இதன்காரணமாக சில பிரதேசங்களில் பாரம்பரிய தொழிற்றுறைகள் அருகிவருகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் பாரம்பரிய தொழிற்றுறைகள் இல்லாதுபோகும் சூழல் ஏற்பட்டுள்ள அதேவேளை இதை நம்பி வாழும் குடும்பங்களும் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவுகளையும் சந்தித்த வருகின்றன.

எனவே பாரம்பரிய தொழிற்றுறைகளை அழியவிடாது அவற்றை பாதுகாப்பது மட்டுமன்றி அதனைச் சார்ந்து வாழ்கின்ற மக்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மேம்பாடு காணவேண்டும். இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு துறைசார்ந்த தொழில்துறை வல்லுநர்களும் தொழிற்றுறைசார்ந்த நிறுவனங்களும் அக்கறையுடன் உழைக்கவேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

இதனிடையே குறித்த சமாசம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இடர்பாடுகள் தொடர்பாக சமாச பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்தரையாடி உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

Related posts:

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து...
தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எ...
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!