நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 30th, 2022

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை தற்போதைய அரசாங்கம் உருவாக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மாட் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட ஸ்மாட் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீ. எல். பீரிஸ், அலி சப்ரி அடங்கிய அதிதிகள் அணி வகுப்பு மரியாதைகளுடன் பாடசாலை மாணவர்களினால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

Related posts:


கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? - நா...
தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்ப ட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறி...
நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் - அமைச்சர...