நக்டாவின் புதிய தலைவராக கலாநிதி விஜேரத்ன நியமனம்!

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) புதிய தலைவராக கலாநிதி பீ. விஜேரத்ன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சில் வைத்து அமைச்சரினால் இன்றைய தினம் (06.09.2023) வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே அஸ்வெசும திட்டத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
நக்டாவின் (NAQDA) தலைவராக பதவி வகித்த கலாநிதி ஜயந்த விஜேரத்ன அஸ்வெசும திட்டத்தின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் தலைமைகள் இல்லாத ஊருக்கு வழி காட்டுகின்றன: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் தேவாவுக்கு இன்று அகவை அறுபத்து நான்கு!
வினைத்திறனற்ற செயற்பாடு - சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்...
|
|