தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்சலிகள் -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025

மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிற எமது பயணத்தில், இயற்கையும் அவ்வப்போது அதிர்ச்சிகளை எமக்களிக்க தவறுவதில்லை.

அவ்வாறான ஓர் அதிர்ச்சியாகவே தோழர் இரவீந்திரனின்(அம்பலவாணர் இரவீந்திரதாசன்) இறப்பு செய்தி அமைந்துள்ளது.

எமது சரியான அரசியல் வழிமுறைகளை ஏற்று செயற்பட்டவர். தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாக கொண்ட வழிமுறையே எமது மக்களுக்கு கெளரமான எதிர்காலத்தை பெற்றுத் தரும் என்ற யதார்த்தத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தன்னால் முடிந்தவரை பாடுபட்டவர்.

இறுதிக் காலங்களில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், இறுதி மூச்சுவரை கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

இவ்வாறான தன்னலமற்ற ஒரு தோழனின் இழப்பு எனக்கும் கட்சிக்கும் பேரிழப்பாகவே அமைந்திருக்கி்றது.

இந்நிலையில், தோழர் இரவீந்திரனின் இழப்பு ஏற்படுத்தியுள்ள வலிகளை சுமந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிப்பதுடன்,

மூத்த தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்லிகளை உரித்தாக்குகிறேன்.

  • டக்ளஸ் தோனந்தா,
    செயலாளர் நாயகம்,
    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)

Related posts:

உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந...
ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்து ஏற்றுமதியை அதிகரிக்க விரிவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரி...
வெடுக்குநாறி ஆதிசிவன் கோவில் மீண்டும் நிறுவப்படும் - எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவி...

சுயபொருளாதாரத்திற்கு தடையாக இருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே - குமுழமுனை மக்கள் ஆதங்கம்!
காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...
துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ...