தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த எம்மைத்தவிர யாரும் முன்வரவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

Saturday, November 18th, 2023

இந்த அரசாங்கம் இன முரண்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அதாவது, இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசாங்கங்கள் இன பாகுபாடுகளையே முன்னெடுத்து வருவதாக ஒரு சிலர் தங்களது சயலாப அரசியலுக்காக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய அரசாங்கங்கள் இத்தகையதொரு மனோ நிலையில் செயற்பட்டு வந்திருந்ததை நானே பல தடவைகள் பல இடங்களிலும் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறேன். அதுதான் உண்மை.

ஆனால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கங்கள் இத்தகைய மனோ நிலையில் இல்லாமல், இனங்களிடையே ஐக்கியத்திற்கான வழிமுறைகளை முன்னிட்டு, செயற்பட்டு வந்திருப்பதையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அரசாங்கங்கள் இத்தகைய நிலைப்பாட்டினை எடுத்து வந்திருந்த போதிலும், எமது தரப்பில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எம்மைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை என்பதே எமது வரலாற்றின் உண்மை நிலைமையாகும்.

இதைவிடுத்து சுயலாப அரசியல் நலன்களுக்காக தொடர்ந்தும் அரசாங்கங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.

எந்தத் தரப்பிலும் ஒரு சில புல்லுருவிகள் இல்லாமல் இல்லை. அதற்காக ஒட்டுமொத்த தரப்பினர் மீதும் தொடர்ந்து பலிபோட்டுக் கொண்டிருப்பது மானுட தர்மத்திற்கே உகந்த செயல் கிடையாது.

கிழக்கு மாகாணத்திலே மயிலத்தமடு பகுதியில் உண்மையிலேயே கால்நடைகள் வளர்ப்போருக்கு மேய்ச்சல் தரை தொரடர்பில் பிரச்சினை இருந்து வருகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பாக நான் நாடாளுமன்றத்திலே பிரச்சினை எழுப்பியிருக்கிறேன். இந்த விடயம் தொடர்பில் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கiயினை எடுத்துள்ளார்.

அதனை செயற்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி தனது அவதானத்தினை மீளவும் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் - வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ச...
கடந்த காலத்தில்  தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...