தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எம்.பி.க்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

Wednesday, May 15th, 2019

தீவக கல்விப் பணிப்பாளரது பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி கல்வி அதிகாரிகள் நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் தற்காலிகமாக காரைநகர் கோட்டக் கல்வி பணிமனையில் பணியை தொடர அனுமதி பெற்றுக்கொடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மனித நேயத்திற்கும் மக்கள் பணிக்கும் என்றும் தாம் உறுதுணையாக இருப்பதுடன் அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என பாதிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த குறித்த பாதிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

பல மாதங்களாக தொடரும் குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலையில் மீண்டும் வலயக்கல்வி பணிமனைக்கு திரும்புமாறு வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளால் தமக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து  குறித்த ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் குழப்பநிலை  ஏற்பட்டது.

ஏற்கனவே தீவக கல்வி வலயக் கல்விப் பணிப்பாளரது அத்துமீறல்கள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் குறித்த வலயத்தில் பணிபுரியும் கல்வி அதிகாரிகளுக்கும் கல்விப் பணிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஒருதொகுதி அதிகாரிகள் காரைநகர் கோட்டக் கல்விப் பணிமனையில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கான ஏற்பாடுகள் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் இரண்டாம் தவணை பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமானதன் பின்னர் மீண்டும் குறித்த அதிகாரிகளை தீவக வலயத்திற்கு திரும்புமாறு மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகளால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கல்விப்பணிப்பாளர் இன்னும் 3 மாதங்களில் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில் இருப்பதால் கல்வி அமைச்சினூடாக அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெற்றபோதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது இருந்துவந்தது.

இதையடுத்து ஏற்கனவே வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் குறித்த ஆசிரியர்களுக்கும் இடையே பழிவாங்கல் உள்ளிட்ட பலதர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் நடைபெற்று அது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த அதிகாரிகளை குறித்த அலுவலகத்திற்கு மீண்டும் மீளத்திரும்புமாறு தெரிவித்தமையால் அவ் அதிகாரிகள் மத்தியில் குழப்ப நிலை காணப்பட்டது.

இந்நிலையில் தமக்கான நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என தெரிவித்து குறித்த அதிகாரிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டுவந்திருந்தனர்.

இந்நிலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களது நிலைமைகளைக் கருத்தில் கொண்டு துறைசார்தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தியதன் பெயரில் தொடர்ந்தும் காரைநகர் கோட்ட அலுவலகத்தில் குறித்த உத்தியோகத்தர்கள் பணியை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தாம் எதிர்கொண்ட பிரச்சினைக்கான தீர்வை விரைவாக பெற்றுத்தந்தது மட்டுமல்லாது தமக்கான உரிமைகளை நிலைநாட்டச் செய்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அவர்கள் நேரில் வந்து தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...
தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!