திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை – அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி!

Friday, March 1st, 2024

வரலாற்றுச் சிறப்புமிக்க திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முதலாம் கட்ட புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது விசனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முதலாம் கட்ட புனரமைப்பு பணிகள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் ஆலைய சூழலை நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆலைய நிர்வாகத்தினரும் தமது நிலைப்பாடுகளை தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக அவ்விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு்கொண்டதுடன் எதிர்வரும்வாரம் விசேட கூட்டம் ஒன்றினை கூட்ட ஏற்பாடு செய்யுமாறும் துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: