செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வு தமிழ் மக்களது உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து இயக்கங்களினது போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கான மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது.
கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வின் முதன்மை உரையை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆற்றினார்
Related posts:
வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
வடக்கு கடற்பரப்பில் கடலடை பிடிப்பதற்கு தற்காலிக தடை - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில்...
|
|