சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடருமானால், 2018ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் ஞ்ரிவிப்பு!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலைப் படகுகளின் எல்லை தாண்டிய, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடருமானால்,
2018ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை, அவற்றின் தொழில் முறைமையை மாற்றி எமது கடற்றொழிலாளர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். – 01.09.2022
Related posts:
வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து...
ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆர...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...
|
|