கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Tuesday, February 4th, 2020

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்ட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டுள்ளார் சிறப்பித்துள்ளார்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு வெள்ளத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சுதந்திர தின பூஜை வைபவத்தில் இலங்கை திருநாட்டின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது. இன்று தேசிய சுதந்திர தின வைபவங்கள் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய கீதத்தை தமிழில் பாடி ஆரம்பித்ததை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டியதுடன் தனது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபையினரினால் ஏற்பாடு: செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் நூலல்களையும் வழங்கி வைத்தார்.

 .

Related posts:

மாணவக் கண்மணிகளின் எதிர்காலம் சிறப்புற அமைய வாழ்த்துகின்றேன் - சித்தியெய்திய மாணவர்களுக்கான  வாழ்த்த...
பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன - இதுவும் சுமந்திரனின் நடிப்பில் ...
தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான அரச திணைக்களங்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என...

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள்  முல்லை மாவட்டச் செயலகத்தில்  அமைச்சர்...
ஜனாதிபதி ரணிலின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் - புலம்பெயர் உறவுகளிடம் அமைச்...
குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் - சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் ...