கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டது.
இதன்மூலம் அந்நியச் செலாவணியைப் நாட்டிற்கு மீதப்படுத்துவதுடன் உள்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த இலக்கை எட்டுவதற்காக, கருவாடு உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் நவீன் தொழில்நுட்பங்களையும் இயந்திர உபகரணங்களையும் உள்வாங்குவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Related posts:
வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்த...
வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் - தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவ...
|
|