கடந்த காலங்களில் சரியனவர்களின் வளிகாட்டுதல்களை தமிழ் மக்கள் பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்புக்கள் நிறைவேறமைக்கான காரணம் -அமைச்சர் டக்ளஸ்!
Friday, September 6th, 2024
கடந்த காலங்களில் பல தேர்தல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த போதும் சரியான தெரிவுகளை அல்லது சரியனவர்களின் வளிகாட்டுதல்களை பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்புக்கள் நிறைவேறமைக்கான காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ,எதிர்காலத்தில் காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே மீண்டும் எமக்கோர் சந்தர்ப்பமாக ஜனதபதி தேர்தல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தள்ள அமைச்சர் கிடைத்துள்ள இவ்வாய்பினை மக்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள ஈபிடிபின் வளிமுறைகளை பின்பற்றி அணிதிர முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பள்ளிக்குடா பிரதேச மக்களது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் ருபா ஒதுக்கிடப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பிரதேச மக்களது அழைப்பின் பெயரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ் அழைப்பினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


