“கஜா”வை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்!
Thursday, November 15th, 2018
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
வளிமண்டலத் திணைக்களத்தின் தகவல்களின் படி கஜா என பெயரிடப்பட்ட புயல் இன்று மாலை இலங்கையின் வடபகுதியை தாக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயற்கையின் சீற்றத்தால் சொத்தழிவுகள் உயிர்ச் சேதங்கள் ஏற்படக் கூடிய நிலைமைகள் உள்ளதாகவும், வரவுள்ளதாக கூறப்படும் “கஜா” என்ற புயல் மிகவும் அசுர வேகத்தில் தாக்கத்தை உருவாக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
எனவே இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் மக்களும் அதிகாரிகளும் அவதானமாக இருக்கமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே அதிகாரிகளுக்கும் மீட்பு நடவடிக்கையினருக்கும் அறிவுறுத்தல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


