ஓமந்தை – மாகோ புகையிரதப் பாதை புனரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு. – அமைச்சர் டக்ளஸ் உறுதி

Sunday, January 8th, 2023

~~~
வடக்கு புகையிரத மார்க்கத்தை நவீன மயப்படுத்தும் தேசிய கருத்திட்டத்தின்படி, இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள, ஓமந்தை தொடக்கம் மாகோ வரையான புகையிரதப் பாதையின் புனரமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு அதனை நிறைவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுமார் 20 மில்லியன் இந்திய கடன் உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த புகையிரதப் பாதையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மக்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதவாச்சி புகையிரத நிலையத்தில் இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் காலப் பகுதியில், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் கௌரவ கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் இந்தியா தொடர்ந்தும் வழங்கிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

ஒமந்தை தொடக்கம் மாகோ வரையான வடக்கு புகையிரதப் பாதையை மேம்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான பயண நேரம் சுமார் ஒரு மணிநேரம் குறையும் என்று இந்நிகழ்வில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

மேலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரத்திற்கு தினமும் 5 புகையிரத சேவைகள் செயற்படும் எனவும் யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நடத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போது இந்தப் புகையிரத பாதையில் 27 இடங்களில் வேகக் கட்டுப்பாடுகள் உள்ளன, பாதையின் பிரிவில் 213 மதகுகள் மற்றும் 90 பாலங்கள் உள்ளதாகவும் அங்கு ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும் என தெரிவித்த புகையிரத நிலைய அதிகாரி, புகையிரதப்பாதை மேம்படுத்தப்பட்டதன் பின்னர் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ ஆக இருக்கும் என தெரிவித்தார்.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர். – 08.01.2023

Related posts:

மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது - சக்தி தொலைக்காட்ச...
அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு...
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...