ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி – பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!

Monday, June 27th, 2022

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின்  உரிமையாளர்கள், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி போன்றவற்றினால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.  

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

000

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன்.  விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!
இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகியுள்ளது – நாடாளுமன்றில் ட...