உதிரிக் கட்சி என்று எம்மை கூறியவர்கள் இன்று உதிர்ந்துபோனார்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2016

இனவிடுதலைப் போராட்டத்தின் மூத்த அனுபவங்களை கொண்டவர்களையும் ஆரம்ப காலங்களில் ஈழப்போராட்டத்திற்கு கரங்கொடுத்த பல வேறு கட்சிகளினது போராளிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சி.

ஒருமித்த கருத்தாலும் கொள்கையாலும் ஒன்றுபட்ட தரம் மிக்கவர்களது வலிமை மிக்க கூட்டுக் கலவையான எமது கட்சிக்கு வழிகாட்டியாக நான் இருந்து எமது மக்களுக்கான அரசியல் உரிமைசார் விடயங்களிலும் அபிவிருத்தியிலும் பெரும்பணிகளையாற்றி வெற்றிகண்டு வந்துள்ளேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

002

நேற்றையதினம் கட்சியின் மானிப்பாய் தொகுதி அலுவலகத்தில் வலிமேற்கு மற்றும் வலி தென் மேற்கு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பிரதேச நிர்வாக செயலாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களுடனான விஷேட கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

இனவிடுதலையின் சாட்சியமாக இருந்தவரும் எமது கட்சியின் தூரநோக்குள்ள அரசியல் பாதைதான் இன்று நிதர்சனமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை தோன்றிவிட்டது.

எமது பலம்பொருந்திய கூட்டுச்சேர்வையால் உருவாக்கப்பட்ட கட்சியின் அனுபவங்கள்தான் எமது தமிழ் இனத்திற்கான உரிமைசார் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வல்லமை கொண்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்த உறுதி மிக்க பயணத்தில் பயணிக்க நாம் கடந்துவந்த சுமைகள் ஏராளம்.

எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியை நாம் உருவாக்கும்போது எம்மை உதிரிக்கட்சி என்று கூறியவர்கள் இன்று தமது இருப்பிற்கே கொழுகொம்பை தேடிக்கொண்டிருக்கும் கட்சியாக உதிர்ந்துபோய்விட்டார்கள்.

0011

எமது மக்களின் வாழ்வியல் வசந்தங்களுக்காக நாம் முன்னெடுத்தச் செல்லும் அரசியல் பாதையின்பால் பயணிக்க நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க தயாரானால் எமது இனத்திற்கான வசந்தங்களை அருகில் கொண்டுவந்துதருவதற்கு உழைக்க நாம் தயாராகவே உள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிமேற்கு பிரதேச நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன். கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) கட்சியின் வலிமேற்கு உதவி நிர்வாக செயலாளர் செல்வக்குமார்  கட்சியின் வலிதென்மேற்கு உதவி நிர்வாக செயலாளர் குலம், உள்ளிட்டோருடன் குறித்த இரு பிரதேசங்களின் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 003

Related posts: