இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Thursday, January 9th, 2020

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவகத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திடீர் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு> மோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த கூட்டுத்தாபனத்திற்கு இன்று(09.01.2020) அதிகாலை திடீர் விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதனையடுத்து மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேம்படுத்துவதற்கும் அமைச்சரினால் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் குறித்த அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக அமைச்சரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்> பணியாற்றுகின்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதுடன் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் உடனடியாக கேள்வி கோரல் முறையில் விற்பனை செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும்> மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் தேவைகளை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்> மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கைவிடப்பட்ட வியாரபார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பதாக அமைச்சரிடம் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள்> அதற்காக தமக்கு 200 இலட்சம் ரூபாய் நிதியினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருமாறும் அவற்றை தம்மால் தவணை முறையில் மீளச் செலுத்த முடியும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன்> மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏனைய அரச திணைக்களங்களினால் செலுத்த வேண்டியுள்ள நிலுவைத் தொகைகளையும் பெற்றுத் தருமாறும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை விஷ;தரிப்பதற்கு  பிரதேச சபைகளுக்கூடாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணியாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பணியாளர்களின் கோரிக்கையை கருத்தில் எடுத்;த அமைச்சர் அவர்கள்> குறித்த கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறும் சம்மந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் ந...
வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் - நாடாளுமன...
நீர் வேளாண்மை ஊடாக மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் - ஓலைத்தொடு...