இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுப்பு!

Thursday, December 17th, 2020

எமது மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் கௌரவமான அரசியலுரிமையையும் உறுதிப்படுத்துவதே சிந்தனையாகவும் செற்பாடாகவும் இருந்து வருகின்ற நிலையில், இரணைமடு நன்னீர் மீன் வளர்ப்பாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகயை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது குளத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலையினை மேலும் அதிகரித்தல், தொழில் சார் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பில்அமைச்சரிடம் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், “அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த தேவைகள் அடுத்துவரும் மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொழிலை மேற்கொள்வதற்காக  செல்லும் வீதி, கடற்றொழிலாளர்களுக்கான தொழில் உபகரணங்கள், மீன்குஞ்சுகளை வெளியேறாது பாதுகாப்பதற்கான கட்டமைப்பை மேம்படுத்தல், நன்னீர் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான திட்டம், இரணைமடு குளத்தில் உள்ள வளங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை தற்போது உள்ள அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் முன்னெடுக்க உள்ளோம்” எனவும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்..

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவசாதன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்.மாவட்ட நன்னீர் நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் சங்கீதன், வட.மாகாண நீர்பாசன பணிப்பாளர், இரணைமடு நீர்பாசன பொறியியலாளர், கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அ...
சுத்திகரித்த குடிநீரை சாவகச்சேரி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!