இந்தியக் கடற்றொழிலாளர்களின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை அனுமதிக்க கூடாது – அமைச்சர் டகளஸிற்கு கடற்றொழிலாளர்கள் அழுத்தம்!

Friday, December 18th, 2020

காலத்தை இழுத்தடிக்கும்  இந்திய கடற்றொழிலாளர்களின் தந்திரத்திற்கு அனுமதிக்க கூடாது என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் பிரதிநிதகளினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை – இந்தியக் கடற்றொழில்சார் தரப்புக்களுக்கிடையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ளை அறிமுன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் கருத்துகளை அறியும் நோக்கில் இன்று இடம்பெற்ற கலந்துiராயாடலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்;தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர்கள்,

கடந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவாத்தைகளின் போது, கால அவகாசம் என்ற பெயரில், இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பதை தந்திரோபாயமாக இந்தியத் தரப்பினர் கையாண்டதாகவும் அதே தந்திரோபாயத்தினையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையிலும் கையாளர்வார்கள் எனவும் தெரிவித்தனர்.

எனவே, குறித்த தந்திரத்தினை பேச்சுவார்த்தையின் போது அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

மேலும். இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்ககையின் கடல் வளங்கள் அழிக்கப்படுவதனாhல் எதிர்காலச் சந்ததியினர் கடற்றொழிலை நம்பி வாழ முடியாத நிலை உருவாக்கப்படுவதாகவும், எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களும் இன்றி, இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவம் தெரிவித்தனர். மாறாக இந்த நிலை தொடருமாயின், யாருடைய உதவியையும் எதிர்பாராமல் தாங்களே சட்டத்தை கையில் எடுத்து இந்திய கடற்றொழிலாளர்களை விரட்டியடிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் தெரிவித்தனர்

Related posts:

வடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் கார...
எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை அனைத்து வளங்களும் நிறை...
எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவ...

எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு
பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...