அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய பத்தாயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு இணக்கம்!

Saturday, July 30th, 2022

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்திய அரசு உடனடியாக 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏட்பட்டுள்ளதால் பல தரப்பினரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இல்லாமல் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சிகளை அடுத்து கடற்றொழிலாளர்களுக்கு ஓரளவு டீசல் கிடைக்க வழி செய்தபோதும், கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலதரப்பட்ட முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் நிலையில் அதில் ஒரு கட்டமாக இந்திய அரசாங்கத்திடமும் மண்ணெண்ணெயின் அவசியத்தை கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.
அதற்கமைய இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிருந்து ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை உடனடியாக ஏற்றுமதி செய்ய இணக்கம் தெரிவித்துள்ள இந்திய அரசுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன் இதனால் பயனடையவுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சார்பாகவும் இந்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts:

தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் - டக்ளஸ் தேவானந...
உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
கடற்றொழிலாளர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் என்னால் கதையளக்க முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டக...

கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக...
வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ் சுடிக்காட்டு!
மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களத...