அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!
Wednesday, December 20th, 2023
கிளிநொச்சி பகுதிக்கு இன்றையதினம்(20) விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளத்திற்கும் விஜயம் செய்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்தும் நீரினை வெளியேற்றும் வகையில் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுவான நிலையினை ஆராயும் நோக்கோடு இரணைமடுவிற்கு களவிஜயம் செய்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதோடு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளோடு கலந்துரையாடலினையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
|


