அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்திரமும் வழங்கி வைப்பு!

Monday, September 19th, 2022

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை  சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை வழங்கி வைத்ததுடன்,  கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

குறிப்பாக கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பண்ணைகள் வழங்குவதை விரைவுபடுத்துவது உட்பட பல்வேறு தொழில்சார் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர் கிராமத்தில் கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானநதா, கலந்துரையாடல் மூலம் முரண்பாடுகளை  தீர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதுடன், கலந்துரையாடலுக்கான முன்னாய்த்தங்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்க...

நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டும் - நாடாளுமன்றில் அம...
சிலாபம் களப்பினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!