வடக்கில் 22 பாடசாலைகளில் 13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்!

Thursday, May 17th, 2018

வடக்கு மாகாணத்தில் 22 பாடசாலைகளில் 13 வருட உத்தரவாத கல்வித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் 13 வருட உத்தரவாதக் கல்வி நிகழ்ச்சித் திட்டம் 2017 ஆம் ஆண்டில் ஐந்து பாடசாலைகளிலும் இவ்வருடம் 17 பாடசாலைகளிலுமாக வடக்கில் 22 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வருடங்கள் தொழில் முறைகள் கல்வியை கற்கும் முகமாக இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2017 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெறாத மாணவர்களும் அதற்கு முந்திய வருடத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இவ் 13 வருட உத்தரவாதக் கல்வியினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இக் கல்விக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன் தமக்கு அண்மையில் உள்ள இவ் நிகழ்ச்சித் திட்டம் நடைபெறும். புhடசாலை அதிபர்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.

இவ் 13 வருட உத்தரவாதக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, மட்டுவில் சாந்தபுர ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, முழங்காவில் மகாவித்தியாலயம், கனகபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு வித்தயானந்தா கல்லூரி, விசுவமடு மகாவித்தியாலயம், சம்பத்நுவர மகாவித்தியாலயம், வள்ளிபுனம் கனி~;ட உயர்தரப் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் மன்னார் மாவட்டத்தில் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி, வட்டக்கண்டல் அ.த.க. வித்தியாலயம், அன்சார் மகாவித்தியாலயம், பரிகரி கண்டல் அ.த.க.ப ஆகிய பாடசாலைகளிலும் வவுனியா மாவட்டத்தில் காமினி மகாவித்தியாலயம், ஒலுமடு மகாவித்தியாலயம், செட்டிக்குளம் மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: