யாழ்ப்பாணத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று – கடந்த 24 மணி நேரத்தில் 116 பேருக்கு தொற்றுறுதி!

Friday, June 11th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் வடக்கு மாகாணத்தில் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 பேரும், வவுனியா மாவட்டத்தில் 23 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட் டங்களில் தலா ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றுடன் கண்டறியப்படட 116 பேரில் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை பகுதிகளில் தலா 37 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: