முடிவடைகிறது ஒப்பந்தம் : ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு !

Monday, October 26th, 2020

சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவுடனான சீனா மற்றும் ரஷ்யாவின் உறவுகள் பதற்றமாக இருக்கும் நிலையில் சீனாவும் ரஷ்யாவும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன.

இதற்கிடையில், அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, அமெரிக்காவுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிவடைகிறது.

எனினும் குறித்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவ் ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக, இரு நாடுகளும் பேசி வருகின்றன.

இந்த நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த, வெளியுறவுத்துறை கொள்கை நிபுணர்களுடன், காணொலி முறையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், சீனா மற்றும் ரஷ்யா இடையே இராணுவ ரீதியிலான உறவு உள்ளது. சீன இராணுவத்தின் வலிமையை அதிகரிக்க, அது உதவி உள்ளது.

அதே நேரத்தில், சீனாவுடன் இராணுவக் கூட்டணி வைப்பதற்கு, தற்போதைய நிலையில் தேவையில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறோம். ஆனால், அதில் இறுதி முடிவை அமெரிக்கா தான் எடுக்க வேண்டும்.

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த திடீர் அறிவிப்பு, சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts: