மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டம்!

Sunday, April 1st, 2018

சிறந்த உயர்தரமான கல்வியை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதை நோக்காகக்கொண்ட விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

கல்வித்துறையின் அபிவிருத்தி, முன்னேற்றம், பிரச்சினைகள் எதிர்நோக்கும் சவால்கள், மற்றும் குறைபாடுகள் என்பவற்றை இனங்கண்டு எதிர்காலத்தில் மாணவர்களுக்கான சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கல்வி அதிகாரிகள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களினால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வட மத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்

Related posts:

எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறை வளர்ச்சி அடையும் – அமைச்சர் ந...
ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் - கல்வி அமைச்சர் ...
சீனா உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பில் நாளை கலந்துரையாடல் - கொமர்ஷல் உர நிறுவனம் அறிவிப்பு!