பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

Sunday, December 10th, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபரால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தலைமையக பொலிஸ் பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று(08) முதல் எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில், குறித்த இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என, பொலிஸ் மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: