புலிகளின் தலைவர்களுக்கு ஐ.நா அகதி அடையாள அட்டை!

Saturday, April 29th, 2017

நாட்டை விட்டு தப்பிச் சென்ற விடுதலைப் புலித் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அடையாள அட்டை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 50 புலித் தலைவர்களுக்கு இவர்களுக்கு இவ்வாறு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ், பிரித்தானியா, நோர்வே மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் குறித்த புலித் தலைவர்கள் தங்கியுள்ளனர்.இவ்வாறு புலித் தலைவர்களுக்கு அகதி அடையாள அட்டை வழங்கிய விபரங்கள் பற்றிய தகவல்களை வழங்க ஐக்கிய நடுகள் அமைப்பு மறுத்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரதித் தலைவர் குசாந்தன் என்பவருக்கு இவ்வாறான ஒர் அடையாள அட்டை வழங்கப்பட்டதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அகதி அந்தஸ்துடைய அடையாள அட்டை வழங்கப்பட்ட எந்தவொரு புலித் தலைவரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வர முடியாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிட நடவடிக்கை!
வெள்ள அனர்த்தம்: உதவிக்கரம் நீட்டியது இந்தியா !
பொலிஸார் அதிரடி: தப்பியோடும் ஆவாக்குழு!
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடவடிக்கை!
சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு துரித வேலைத்திட்டம் - வி.சிவஞானசோதி!