தென்னை பயிர்ச்செய்கை சபையின் செவ்வண்டு தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு !

Friday, July 6th, 2018

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும்கோடை காரணமாக தென்னையில் செவ்வண்டின் தாக்கம் பாரியளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பிரதேசத்தின் தொட்டியடி, நெத்தலியாறு ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கும் வள்ளிபுனம் பிரதேசத்தின் தேவிபுரம், ஆனந்தபுரம், சுதந்திரபுரம் போன்ற கிராமங்களில் முற்பகல் 11 மணிக்கும் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தலைமையில் நடைபெற்றன.

செவ்வண்டானது தென்னையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தென்னைமரம் விழுந்தவுடனேயே மக்களுக்கு விழிப்புணர்வு வருகின்றது. அதனை தவிர்ப்பதற்காக செவ்வண்டு தடுப்பு முறைகளை ஆரம்பத்திலேயே செய்து தாக்கத்தை குறைக்கலாம். இதற்கு முன் ஏற்பாடாக தென்னம்தோட்ட வளவையும் தென்னையையும் சுத்தமாக வைத்திருப்பதோடு செவ்வண்டு தாக்கம் தெரிந்தவுடன் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு அறிவித்து பொருத்தமான தடுப்பு முறைகளின் மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts:

உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய த...