உக்ரைனுக்க ஸ்வீடன் உதவி – கடுமையான எச்சரிக்கை விடுத்தது ரஸ்யா!

Saturday, February 26th, 2022

ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்..

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. உக்ரைன் நாட்டிற்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்வீடன் அரசு தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூட்டினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனின் செயலால் ஆத்திரமடைந்த ரஷ்யா, ஸ்வீடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உக்ரைனில் அதிகாரத்தைக் கைப்பற்ற உக்ரைன் ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைனுடன் போர் தொடுத்து வரும் ரஷ்யா, உக்ரைனுடன் பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.

உக்ரைனில் தற்போது ஆட்சியை கவிழ்த்து இராணுவம் ஆட்சியைப் பிடித்தால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது எளிதாகும் என புதின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: