அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – அமைச்சர் பைஸர் முஸ்தபா!

Thursday, December 7th, 2017

தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அமைச்சின் பக்கத்தில் எந்த தாமதமும் இல்லை என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், எனக்குப் பந்து வீசாமல் விளையாட முடியாது. அதிகாரத்திற்கு உட்பட்டே நாம் செயற்பட்டு வருகின்றோம். தேர்தல் தொடர்பாக அமைச்சர்களிடம் இருந்து முழு ஆதரவும் கிடைக்கவில்லை.

சுயாதீனமாக நாம் செயற்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெறுமா? என பைஸர் முஸ்தபாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

குறித்த கேள்விக்கு பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் பதில் அளிக்கையில், தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணையகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாட்டின் பிரஜை என்ற வகையிலும் அமைச்சர் என்ற வகையிலும் நான் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

எமது அமைச்சு தரப்பில் தேர்தல் நடத்துவதற்கு சகல செயற்பாடுகளையும் முழுமையாக செய்து முடித்து விட்டோம். எமது பக்கத்தில் எந்தவித காலதாமதமும் இல்லை.

தேர்தல் ஆணையாளர் என்ற வகையிலும் அவர் தனது பணிகளைச் சரியாகவே செய்து வருகின்றார். இந்த விடயத்தில் அவர் தேர்தலை தாமதப்படுத்துகின்றார் என்றால் அவரிடம் கேள்விகளைக் கேளுங்கள். என்மீது குற்றச்சாட்டு இருந்தால் என்னிடம் கேளுங்கள். எனக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: