73 விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் அழிப்பு – அமெரிக்கா மீது தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு!

Thursday, September 2nd, 2021

அமெரிக்க இராணுவம் காபூலை விட்டுச் செல்லும்போது விமான நிலையத்தை பயன்படுத்த முடியாதபடி சேதமாக்கி விட்டதாகவும் 73 விமானங்கள் மற்றும் ஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் தலிபான் குற்றம்சாட்டியுள்ளது.

விரைவில் விமான நிலையத்தை திறக்கவும் சிவில் விமானப் போக்குவரத்தைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ள தலிபான்கள் விமான நிலைய புனரமைப்புப் பணிகளுக்காக கத்தாரில் இருந்து நிபுணர்களை வரவழைத்துள்ளனர்.

ஆப்கான் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்காகவும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்

000

Related posts: