10 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு – சிரியாவில் சம்பவம்!  

Saturday, January 13th, 2018

டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் திகதி ஆரம்பமானது. தொடர்ந்து 7-வது ஆண்டாக சண்டை நீடித்து வருகின்ற நிலையில், இதுவரை உள்நாட்டுப் போரினால் அங்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 25 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதல் நடைபெற்றது. இன்னொரு முனையில் பீரங்கிகளைக் கொண்டும் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 10 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல்களை நடத்தியது அதிபர் ஆதரவு படைகளா அல்லது அவர்களுக்கு பக்க பலமாக உள்ள ரஷியாவின் படைகளா என்பது தெரியவரவில்லை என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

Related posts: