1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பாஜக தலைவரின் மகன் விடுதலை!

Friday, September 9th, 2016

அசாமில்  அந்த மாநில பாஜகவின் மூத்த தலைவராக ரத்னேஸ்வர் மோரன் உள்ளார். அவரது மகன் குல்தீப். கடந்த 1-ம் திகதி அருணாச்சல பிரதேசம் நாம்பாங்கில் தங்கியிருந்த குல்தீப்பை உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

துப்பாக்கி ஏந்திய 5 பயங்கரவாதிகள் நடுவில் நின்று குல்தீப் பேசும் வீடியோவை உல்பா அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தனது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பணயத் தொகையை கொடுத்து தன்னை மீட்குமாறு முதல் மந்திரிக்கு அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பாணியில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், மியான்மர்-அருணாச்சல பிரதேச எல்லையில் வைத்து குல்தீப் மோரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

142608_1 copy

Related posts: