அமேசன் காடுகளைக் காப்பாற்ற தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம்!

Saturday, September 14th, 2019


பூமியின் இதயமாகவும், உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டலக் காடானதுமான அமேசன் காடுகளைக் காப்பாற்ற 7 தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

அண்மைக் காலமாக காட்டுத்தீ சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் 80,000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகில் ஒட்சிசன் உற்பத்தியில் அதிக பங்கேற்று பூமியின் இதயமாக உள்ள இந்தக் காட்டினைக் காப்பாற்ற கொலம்பிய ஜனாதிபதி இவான் துக் தலைமையில் லெட்டிசியா நகரில் 7 தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக்குவாடர், கயானா, பெரு மற்றும் சுரிநாம் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இந்த மாநாட்டில் அமேசன் காடுகள் காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றவும், ஏற்கனவே காட்டுத்தீயால் கருகிப் போன பகுதிகளில் புதிய காடுகளை உருவாக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் அமேசன் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாக்கவும், செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கவும், உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: