வேர்ஜினியாவில் பதட்டம்: அவசர நிலைமை பிரகடனம்!

Tuesday, August 15th, 2017

 

அமெரிக்கா, வேர்ஜினியா மாநிலத்தில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளை நிற தேசியவாதிகளுக்கும் அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 1861ஆம் ஆண்டு இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது, வேர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்பு இயக்கத்தை வழிநடத்திய ரொபேர்ட் இ லீ என்பவரது உருவச்சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து, தீவிர வலதுசாரி வெள்ளை இனத்தவர்கள் நேற்று (சனிக்கிழமை) பேரணியில் ஈடுபட்டனர்.

இவர்களின் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றுமொரு பிரிவினரும் பேரணியில் ஈடுபட்டனர். இதன்போது, இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், காரொன்று வேகமாக வந்து மோதியதில், இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலைமை மோசமாகியதால், அம்மாநில ஆளுநர், அவசர நிலைமையைப் பிரகடனம் செய்துள்ளார். அத்துடன், அங்கு பாதுகாப்புக் கடமையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts: