வேகமாக வளர்ச்சி காணும் ஜேர்மன் பொருளாதாரம்!

Saturday, May 14th, 2016

ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்த்ததைவிடவும் மிக அதிகம் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 0.7 சதவிகிதம் விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது 0.3 சதவிகிதம்வரை பொருளாதார வளர்ச்சி இருக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில் இந்த ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் முதல் காலாண்டின் வளர்ச்சி விகிதம் 0.5 சதவிகிதம் இருக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

உள்ளூர் தேவைகள் அதிகரித்திருப்பதே இந்த அதி வேக வளர்ச்சிக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, குடிமக்களும் அரசும் தேவை உணர்ந்து செலவு செய்வதும், அதனால் முதலீடும் அதிகரித்துள்ளது என கூறுகின்றனர்.

இதே நிலை நீடித்தால் ஓராண்டில் ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 1.3 சதவிகிதம் வரை விரிவடையும் எனவும் இது கடந்த ஆண்டை விடவும் மிக அதிகம் என கூறுகின்றனர்.

இருப்பினும் இந்த தரவுகள் அனைத்தும் முதற்கட்ட ஆய்வுகளின்படி வெளியிடப்பட்டவயே எனவும் மே மாத இறுதியில் மேலதிக தகவல்கள் வெளிவரும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts: